World General Knowledge Recently
உலகின் சிறந்த நாடு : சுவிட்சர்லாந்து
• இந்தக் கணக்கெடுப்பானது. 10 வெவ்வேறு உள் தரநிலைகளைப் பயன்படுத்தி ஒரு உலகளாவியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் சுமார் 89 நாடுகளை தரவரிசைப் படுத்துகிறது.
• சுவிட்சர்லாந்து நாடானது வாழ்க்கைத் தரம் மற்றும் சுதந்திரமான வணிகம் ஆகியவற்றின் பல அளவுருக்களில் முன்னணி இடத்தில் உள்ளதோடு பாரம்பரியத் துறையில் அந்நாடு குறைந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது.
• மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து இக்கணக்கெடுப்பில் ஏழாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
• ஐரோப்பிய நாடுகள் முதல் 25 இடங்களில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளன.
• சுவிட்சர்லாந்தைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
• இந்திய நாடானது 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இருந்த இடத்தினை விட மூன்று இடங்கள் சரிந்து, இந்த ஆண்டின் பட்டியலில் 33 வது இடத்தில் உள்ளது.
• ஜப்பான், சிங்கப்பூர், சீனா மற்றும் தென் கொரியா மட்டுமே ஆசியாவில் முதல் 25 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
பிரிக்ஸ் அமைப்பில் துருக்கி
• பிரிக்ஸ் கூட்டணியில் சேர துருக்கி சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
• BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் ஒரு பெயர் சுருக்கமாகும்.
• வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் குழுவான இது, அந்த நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த முயல்கிறது.
• இந்த ஆண்டு, இவ்வமைப்பு ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு புதிய உறுப்பினர்களைப் பெற்றது.
• துருக்கி நாடானது நீண்டகால மேற்கத்திய நட்பு நாடாகவும் 1952 ஆம் ஆண்டு முதல் நேட்டோ உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
• ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் துருக்கி தொடர்ந்து ஒரு நிராகரிப்பை எதிர் கொண்டுள்ளது.
தாலிபான்களின் புதிய "அறநெறிச் சட்டம்"
• தாலிபான் அமைப்பின் உயர் நிலை தலைவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் "அறநெறிச் சட்டத்தை" இயற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
• இது நாட்டில் பெண்கள் மற்றும் பிற குழுக்கள் மீதான கட்டுப்பாடுகளை முறைப் படுத்திச் சட்டமாக்குகிறது.
• அவர்கள் 114 பக்கச் சட்டத்தினை வெளியிட்டுள்ளனர், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்ற சட்டங்கள் முதல் முறையாக இயற்றப்பட்டுள்ளன.
• பொது இடங்களில் ஒரு பெண் எல்லா நேரங்களிலும் முகம் உட்பட தனது முழு உடலையும் மறைக்க வேண்டும் என்பதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.
• பெண்கள் தங்கள் வீட்டிற்குள் கூட பாடல் பாடவோ, சத்தமாக புத்தகம் வாசிக்கவோ கூடாது.
• இரத்த பந்தம் அல்லது திருமண உறவில் இல்லாத பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது கூட தடை செய்யப்பட்டுள்ளது.
• முன்னதாக தலிபான்கள் 6 ஆம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க என்று தடை விதித்தனர்.
சீன-ஆப்பிரிக்க கூட்டுறவு மன்றம் (FOCAC)
• சீன அரசானது 9வது சீன-ஆப்பிரிக்க கூட்டுறவு (FOCAC) உச்சி மாநாடானது சீனாவின் பெய்ஜிங் நகரில் நடத்தியது.
• சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 51 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கினார்.
• சீன-ஆப்பிரிக்க கூட்டுறவு மன்றம் ஆனது 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
• இது சீன மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான உத்தி சார் கூட்டாண்மையை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
• FOCAC உச்சி மாநாடு ஆனது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என்ற நிலையில் சீனா மற்றும் ஒரு ஆப்பிரிக்க நாடு ஆகியவை சுழற்சி முறையில் மாறி மாறி இந்த உச்சி மாநாட்டினை நடத்தி வருகின்றன.
• FOCAC அமைப்பில் 53 ஆப்பிரிக்க நாடுகள் - எஸ்வதினியைத் தவிர முழுக் கண்டமும் அதில் உறுப்பினர்களாக உள்ளன.
• பெய்ஜிங்கின் "ஒரே சீனா" கொள்கைக்கு எதிராக எஸ்வதினி நாடு தைவானுடன் அரசு முறை உறவுகளைக் கொண்டுள்ளது.
குரங்குக் காய்ச்சல் - சுகாதார அவசரநிலை
• உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது குரங்குக்காய்ச்சலை "சர்வதேச அளவில் கவலை கொள்ள வைக்கும் வகையிலான பொது சுகாதார அவசரநிலை" (PHEIC) ஆக அறிவித்துள்ளது.
• குரங்குக்காய்ச்சல் ஆனது ஆர்த்தோபாக்ஸ் வைரஸால் ஏற்படுகிறது.
• 1970 ஆம் ஆண்டில் மனிதர்களில் முதன்முதலில் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது என்றாலும் அது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப் பட்டது.
• இந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் 11 நாடுகளில் ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 2,100க்கும் மேற்பட்ட நோய்ப் பாதிப்புகள் மற்றும் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
• ஆப்பிரிக்காவிற்கு வெளியே வேறு நாடுகளில் குரங்குக்காய்ச்சல் கிளேட் 1 திரிபின் பாதிப்பைப் பதிவு செய்த முதல் நாடு சுவீடன் என்றும் உலக சுகாதார அமைப்பானது தெரிவித்துள்ளது.
மடெய்ரா காட்டுத்தீ
• போர்த்துகீசியத் தீவான மடெய்ராவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது 5,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பரப்பளவினைச் சேதப்படுத்தியுள்ளது.
• இது உலகில் எஞ்சியிருக்கும் மிகப்பெரிய லாரல் என்ற மிதவெப்ப மண்டலக் காடுகள் (லாரஸ் நோபிலிஸ்) ஆகும்.
• இது ஐநா யுனெஸ்கோ அமைப்பினால் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் கருதப் படுகிறது.