ஜனாதிபதித் தேர்தல் 2024; வாக்களிப்பு முறை

 ஜனாதிபதித் தேர்தல் 2024; வாக்களிப்பு முறை...!




👉இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 21.09.2024 அன்று இடம்பெறவுள்ளது. 

👉அந்தவகையில் குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் 14.08.2024 அன்று மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்திருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணத்தினை (அரசியல் கட்சி 50000.00, சுயேட்சை – 75000.00) செலுத்தியிருந்தனர்.

👉அத்துடன் வேட்புமனுத்தாக்கல் 15.08.2024 அன்று காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை இடம்பெற்றது. இதில் கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

👉எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸ்ஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, சரத் பொன்சேகா, விஜேயதாச ராஜபக்ஷ, அரியநேந்திரன் உட்பட 39பேர் போட்டியிடவுள்ளனர்.

வாக்களிக்கும் முறை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலானது மிகுந்த சவால் மிக்க தேர்தலாகவும், விருப்பு வாக்கின் மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலாகவும் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைவரும் தங்களுக்கான விருப்பு வாக்கையும் பயன்படுத்தலாம்.

ஒருவர் 1, 2, 3 என மூன்று வாக்குகளை வெவ்வேறுபட்ட மூன்று பேருக்கு அளிக்க முடியும்.

வாக்களிப்பு முறை 01

ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் X என அடையாளம் இடலாம் அல்லது 1 என இலக்கம் இடலாம்.

பெயர் - சின்னம்

பெயர் A - @ - 

பெயர் B - > - X அல்லது 1

பெயர் C - $ - 

பெயர் D - < - 

பெயர் E - * - 

பெயர் F - # - 

X என அடையாளம் இட்டால் ஏனைய விருப்பு வாக்குகளை செலுத்த முடியாது. அவ்வாறு செலுத்தினால் அது செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்.

வாக்களிப்பு முறை 02

ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் 1 எனவும் இன்னுமொருவருக்கு 2 எனவும் இலக்கமிட்டு இரண்டு வாக்குகளை அளிக்க முடியும்.

பெயர் - சின்னம்

பெயர் A - @ - 

பெயர் B - > -  

பெயர் C - $ - 1

பெயர் D - < -  

பெயர் E - * - 

பெயர் F - # - 2

வாக்களிப்பு முறை 03

ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் 1 எனவும், இன்னுமொருவருக்கு 2 எனவும், இன்னும் ஒருவருக்கு 3 எனவும் இலக்கமிட்டு மூன்று வாக்குகளை அளிக்க முடியும்.

பெயர் - சின்னம்

பெயர் A - @ - 1

பெயர் B - > -  

பெயர் C - $ - 2

பெயர் D - < -  

பெயர் E - * - 

பெயர் F - # - 3

இவற்றைத் தவிர வேறு ஏதாவது வகையில் அளிக்கப்படுகின்ற வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக கருதப்படும்.

1. X என அடையாளம் இட்டு பின்னர் விருப்பு வாக்குகளுக்கு 2, 3 ஆகிய இலக்கங்களை பயன்படுத்துதல்

2. மூன்று வாக்குகளையும் X என அடையாளம் இடுதல்

3. மூன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை இடுதல்.

ஏதாவது ஆலோசனைகள், தவறுகள் இருந்தால் குறிப்பிட முடியும்

கருத்துரையிடுக

புதியது பழையவை