"Courses" கற்கை நெறியை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்...!

"Courses" கற்கை நெறியை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்...!

01 ) முதலாவதாகா கற்கை நெறியின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தல்:

👉DIPLOMA, 

👉ADVANCE DIPLOMA, 

👉NVQ LEVEL'S 

👉 DEGREE

02) இரண்டாவது நீங்கள் தொடர விரும்பும் கற்கை நெறி மூன்றாம் நிலைக் கல்வி அல்லது தொலைக்கல்வியாக இருந்தால், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்..!

👉இலங்கையில் TVEC (Tertiary and Vocational Education Commission) எனப்படும் மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொலைக்கல்வி ஆணைக்குழுவில் அந்த கல்வி நிறுவனம் மற்றும் அதன் கற்கை நெறிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

👉DEGREE அல்லது POSTGRADUATE DEGREE:

நீங்கள் தேர்வு செய்யும் கற்கை நெறி பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின் கற்கை ஆகவாயின், அதை வழங்கும் கல்வி நிறுவனம் UGC (UNIVERSITY GRANTS COMMISSION) எனப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

( UGC அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மட்டுமே இந்த தகுதிகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது)

👉சர்வதேச பல்கலைக்கழகங்கள்:

இலங்கையின் UGC அனுமதி பெற்ற பல சர்வதேச பல்கலைக்கழகங்கள் உள்ளன, இவற்றில் கற்கைநெறிகளை தொடர்வது தொழில் வாய்ப்புகள் பெற உதவும், இவை பற்றிய விவரங்களை👇 http://www.ugc.ac.lk/en/universities-and-institutes/recognized-foreign-universities.html இல் காணலாம்.

👉அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள்:

SLIIT, CINEC, NSBM போன்ற அரச அங்கீகாரம் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் தரமான கல்வியைப் பெற்றுக்கொள்ளலாம். இங்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் கல்வி தரமானதாக இருப்பினும், கட்டணங்கள் அதிகமாக இருக்கும்.

இவற்றை காணவும், உயர் கல்வி அமைச்சின் இணையத்தளமான 👇http://www.mohe.gov.lk/index.php/universities-and-institutes/otherrecognizedinstitutesdegrees இல் பார்வையிடலாம்.

03) மூன்றாவது கற்கைக்கான கால எல்லையை அறிதல்...

👉இன்று அதிகமான தொழில்களுக்கான நேர்முகப்பரீட்சையில், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் சான்றிதல்கள், குறிப்பாக ஆறு மாதத்திற்கு மேற்பட்ட கால எல்லை கொண்ட தகவல் தொழில்நுட்ப (ICT) மற்றும் ஆங்கில DIPLOMA சான்றிதல்கள், அதிக புள்ளிகள் பெறுகின்றன.

🛑NOTE :- குறுகிய கால கற்கைகள்:

சில தனியார் கல்வி நிறுவனங்கள் குறுகிய காலத்துக்கான கற்கைகள் (ஒரு அல்லது இரண்டு மாதங்கள்) வழங்குகின்றன, இவை வேலைவாய்ப்புகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. உதாரணமாக, குறுகிய கால தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில Diploma சான்றிதல்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்புகளில் கருதப்படுவதில்லை.

04 ) நான்காவது விரிவுரையாளர்கள் தகைமை மற்றும் தரம்...

👉பல தனியார் கல்வி நிறுவனங்களின் செலவுகளை குறைக்க, தகுதி குறைந்த விரிவுரையாளர்களை பயன்படுத்துகின்றன.இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை.

👉கற்கையை தேர்வு செய்யும் போது, விரிவுரையாளர்களின் தகுதிகள் மற்றும் திறன்களை சரிபார்க்கவும், அவர்கள் கற்பிக்கும் துறைசார் அனுபவம், பழைய மாணவர்களின் கருத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ளவும்.

👉இதன்படி,1978ம் ஆண்டின் 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் 1980ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை திறந்த பல்கலைக்கழகம், 600க்கும் மேற்பட்ட கற்கை நெறிகளை வழங்குகிறது, இது இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 15வது பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது.

05) ஐந்தாவது கல்வி முறைகள்...

👉முழு நேர, பகுதி நேர மற்றும் தொலைக்கல்வி வாயிலாக மாணவர்கள் தமக்கான கற்றல் முறையைத் தேர்வு செய்து, தங்கள் வேலைகளை மேற்கொண்டு கல்வியைத் தொடரும், சுய தேடல் முயற்சிகளுக்கு உதவும் வகையில், ஒப்படைகள் மற்றும் பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றனவா என்றும் மாணவர்களுக்கு கற்றல்-கற்பித்தல் முறைகள் பல்கலைக்கழகக் கனவை நனவாக்க உதவும் இணையதளம் 👇

http://www.ou.ac.lk/home/index.php இல் மேலதிக தகவல்களைப் பெறலாம்.

06) ஆறாவது அரச தொழில் நுட்பக் கல்லூரிகள் துறைசார்ந்த கற்கைகள்...

👉இலங்கையில் மிகக் குறைந்த செலவில் HND உற்பட தொழில்சார் கற்கைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் அரச தொழில் நுட்பக் கல்லூரிகள்ஆகியவற்றால் வழங்கப்படும் சான்றிதழ்கள் வைத்து அரசாங்க, தனியார் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.


07) ஏழாவது கற்றல் முறைகள்...

👉முழு நேர மற்றும் பகுதி நேர அடிப்படையில் பல துறைசார்ந்த கற்கைகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன, முழு நேர மாணவர்களுக்கு கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன, இந்த கல்லூரிகள் பற்றிய மேலதிக தகவல்களை http://www.dtet.gov.lk/web/?option=com_techedu&task=branchdetailfs&bif இல் காணலாம்.

" 📚 கல்வி என்பது வாழ்வின் விளக்கின் ஒளி; அது நமக்கு அறிவின் வெளிச்சத்தை வழங்கி, எதிர்காலத்தின் பாதையை திறக்கிறது.."

COPIED FOR FB PAGE


கருத்துரையிடுக

புதியது பழையவை